மூலம்

·          வல்லாரை கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து கூட்டு போல் வைத்து சாப்பிடவும்.

·          காட்டுத் துளசியின் விதைகளை காயவைத்து தூளாக அரைத்து அரை டீஸ்பூன் அளவு எடுத்து பாலுடன் கலந்து குடிக்கவும்.

·          துத்திக் கீரை சாறு எடுத்து காலை வெறும் வயிற்றில் பசும்பாலோடு சேர்த்துக் குடிக்கவும்.

·          காட்டாமணக்கு இலையை நீர் விட்டு மைய அரைத்து ஆசன வாயில் தடவ உள் மூலம் சிறிது நாளில் குணமாகும்.

·          வில்வம், கஸ்தூரி மஞ்சள், மல்லி, ஓமம், கல்லுப்பு இவைகளை தூள் செய்து ஒரு ஸ்பூன் நெய்யுடன் சிறிது தேன் கலந்து சாப்பிடவும்.


Tamil Sites Directory - Listing of Tamil web sites