கைகால் வியாதிகள்
· வாழைப்பூவை இடித்து விளக்கெண்ணை விட்டு வதக்கி எரிச்சல் உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.
· சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீர் விட்டு அரைத்து குடைச்சல் உள்ள இடத்தில் பூசவும்.
· தூதுவளை இலையை மைபோல் அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து பசும்பாலில் காலை மாலை 15 நாள் சாப்பிட கைகால் நடுக்கம் போகும்.
· காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சி சாறும் கலந்து சாப்பிட கைகால் நடுக்கம் குறையும்.
· எலுமிச்சை பழச்சாறை தேய்க்க கைகால் சொரசொரப்பு அகலும்.