மலச் சிக்கல்

·        காய்ந்த திராட்சைப் பழங்களை பசும்பாலில் ஊறவைத்து பின் பிழிந்து சாறெடுத்து அதை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர மலச்சிக்கல் தீரும்.

சீத பேதி நிற்க

·        நாட்டுச் சர்க்கரையுடன் பசும் வெண்ணை சேர்த்து குழைத்து 3-வேளை கொடுக்கக் குணமாகும்.

நரம்புகள் உறுதியாக

·        சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

வயிற்றுப் போக்கு நிற்க

·        கோரைக் கிழங்கை தோல் நீக்கி வேகவைத்து அந்நீரை வடித்து குழந்தைக்கு கொடுக்க நாற்பட்ட வயிற்றுப்போக்கு நிற்கும்.

வயிற்றுப் பூச்சிகள் ஒழிய

·        வசம்பை நெருப்பில் சுட்டு பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து கொடுக்க வயிற்றுப்பூச்சிகள் ஒழியும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites