தாய்ப் பால் அதிகமாக
· 1 லிட்டர் தண்ணீரில் சர்க்கரைவள்ளிக் கிழங்கைப் போட்டு கொதிக்கவைத்து அந்த நீருடன் சுத்தமான பசும் பாலைக் கலந்து சிறிது கற்கண்டையும் சேர்த்து சாப்பிட தாய்ப்பால் அதிகரிக்கும்.
· இளம்பிஞ்சு நூல்கோலை சமைத்து தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு கொடுக்க பால் சுரக்கும்.
· அசுவகந்திச் செடி இலையை கசாயம் வைத்து குடிக்க அதிக தாய்ப்பால் சுரக்கும்.
· கொய்யா பழத்தின் சதையை மட்டும் எடுத்து காய்ச்சி ஆறிய பாலில் சிறிது தேன்விட்டு அதனோடு கலந்து பருக பால் சுரக்கும்
· ஆலமரத்தின் விதையையும் ஆல மரத்தின் கொழுந்து இலையையும் அரைத்து பசும்பாலில் கலந்து சாப்பிட தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.