இளநரை
· கறிவேப்பிலை,கரிசிலாங்கண்ணி,கீழாநெல்லி போன்றவற்றில் சாறெடுத்து தலையில் தடவி வர நரை மாறும்.
· 20 கிராம் அதிமதுரம் துண்டு துண்டாக நறுக்கி 5மி.லி தண்ணீர் சேர்த்து காய்ச்சி ஆரிய பாலில் ஊறவைக்கவும்,15 நிமிடம் கழித்து அரைத்து கூந்தல் முழுவதும் தடவி தலையில் அழுத்தி தேய்க்க...1 மணி நேரம் ஊறிய பிறகு குளிக்கவும்
· தினசரி உணவில் புதினா கீரை, இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்
· நெல்லிக்காய் சாறெடுத்து நல்லெண்ணை சம அளவு கலந்து தலையில் தேய்த்து குளிக்கவும்
· பசு வெண்ணை தலையில் தடவி குளிக்கவும்
· கறிவேப்பிலை பொடி உணவில் கலந்து சாப்பிடவும்
· சிவகரந்தை சூரணம்,கரிசிலாங்கண்ணி சூரணம்,இரண்டும் தேனில் கலந்து குடிக்கவும்.
· 25 கிராம் வெந்தயம் பொடி செய்து தயிரில் அரப்புபோல் கரைத்து தலையில் தடவி அரை மணி நேரத்திற்கு பிறகு குளிக்கவும்
· அவுரி இலை, மருதானி இலை இரண்டையும் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு இந்த எண்ணையை தலையில் தடவி வர நரை மாறும்.
· மருதானி இலையைப் பறித்து சுத்தம் செய்து மைய அரைத்து இரவு படுக்கப்போகும் முன் தேய்த்து சிறிது காய்ந்ததும் படுத்து விடவும்.மறுநாள் காலையில் முடி சிறிது கறுப்பாகியிருக்கும்.இது போல் தொடர்ந்து செய்து வர நரை போகும்