தொப்புள் புண் ஆற

·        சீனாக் காரத்தை வறுத்து பொடி செய்து தொப்புள் மீது தூவி தேங்காய் எண்ணை தடவினால் சீக்கிரம் குணமாகும்.

உடல் பலம் பெற

·        செம்பருத்திப்பூவை சுத்தம் செய்து 200-மில்லி தண்ணீர் விட்டு அதனுடன் பால்கற்கண்டு சேர்த்து 100-மில்லியாகும் வரை காய்ச்சி ஆறிய பின் பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தினசரி 2-வேளை கொடுத்து வர குழந்தைகள் பலம் பெறுவார்கள்

மாதவிடாய் சத்துணவு

·        கோதுமைக் கஞ்சி வைத்து அடிக்கடி சாப்பிட சோர்வு நீங்கும்.

மாதவிடாய் தள்ளிப் போக

·        மாதவிடாய் நாட்களுக்கு 1-வாரம் முன்னமிருந்தே தினசரி நாவல் பழத்தை சாப்பிட்டு வர நாள் தள்ளிப் போகும்.

கருப்பை பிரச்சினைகள்

·        ஆடு தீண்டாப் பாளையை சுத்தம் செய்து அதனுடன் 50-எண்ணிக்கை மிளகை வைத்து மைய அரைத்து காலை மாலை என 2-வேளை சாப்பிட்டு வர கருப்பையிலுள்ள பூச்சிகள் ஒழுந்து குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites