செருப்புக் கடி

·        பச்சை மூங்கில் குச்சியை துண்டாக வெட்டி எடுத்து நீர் விட்டு மைய அரைத்து செருப்புக்கடியின் மீது தடவிவர குணமாகும்.

·        தென்னைமரக் குருத்தோலையை நெருப்பில் இட்டு கருக்கி எடுத்து அதனை தூள் செய்து அதன் பின் தேங்காய் எண்ணை குழப்பி செருப்புக் கடிபட்ட இடத்தில் தடவிட குணமாகும்.

தேள் கடி

·        தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

·        எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.

·        நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

 

ஆண்மைக் குறைவு

·        மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

·        தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

·        அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

·        அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

·        படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

தாது விருந்தி

·        முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

·        நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

·        கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

·        அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

·        வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

உடல் மெலிய

·        100-கிராம் கொள்ளை சுத்தம் செய்து ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து குடித்துவர சொல்லிக்கொள்ளும்படி உடல் மெலியும். உடல் பலமும் கிடைக்கும்.

·        இலந்தை இலைகளை எடுத்து சுத்தம் செய்து மைபோல அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி உள்ளுக்கு அருந்தி வரவும்.

·        கல்யாண முருங்கை இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும்.

·        25-கிராம் சோம்பு, 5-கிராம் கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் கால் லிட்டர் தண்ணீர் விட்டு 50-மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டி 50-மில்லி சுத்தமான தேன் கலந்து காலை மாலை குடித்துவர ஊளைச் சதை குறையும்.

·        நில ஆவரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில் போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.

கை நடுக்கம்

·        காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு தேனும் அதே அளவு இஞ்சிச்சாறும் கலந்து சாப்பிட்டு வரவும்.

·        வெள்ளைத்தாமரை இதழ்களை மட்டும் எடுத்து கசாயம் வைத்து வடிகட்டி பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

 

கருத்தரித்த பெண்களுக்கு

·        கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழம் சாப்பிட்டு வர பிறக்கும் குழந்தை ஊட்டச் சத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கைகால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.

·        குழந்தைக்கு சத்தாக பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். அதனால் குழந்தை நல்ல வளர்ச்சி பெறும்.

·        நெல்லிக்காய் முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் சேர்த்து வந்தால்

·        கைகால் வீக்கம் வராமலிருக்கும்.

·        அமுக்கராங் கிழங்கை இடித்து 200-மில்லி நல்ல தண்ணீரில் கொதிக்கவைத்து 100-மில்லியாக சுண்டியதும் எடுத்து ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு காலை மாலை 2-வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வர தேக பலம் கிடைக்கும்.

மாதவிடாய் வலி தீர

·        மாதவிடாய் நாளில் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட்டு வர வலி நீங்கும்.

·        மலைவேம்பு இலையை இடித்து சாறு பிழிந்து சாப்பிட்டு வர வலி தீரும்.

கருப்பை கோளாறுகள் நீங்க

·        நெல்லிக்கனியை தினசரி சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதோடு தாய்க்கும் குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

·        அருகம்புல்லை அரைத்து உட்கொண்டால் பெண்களுக்கு மாதவிடாய் தடை ஏற்படாது.

·        முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டு வர கருப்பையின் பலவீனம் மறைந்து பலம் பெறும்.

·        அரசமரத்தின் இலையை மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் 1-உருண்டை சாப்பிட்டு வர குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குழந்தை பாக்கியம் பெற

·        வாரத்தில் 3-நாட்கள் அகத்திக்கீரை சாப்பிட்டு வருவதுடன் தினசரி செவ்வாழைப் பழம் 1-வீதம் ஒரு மாதம் சாப்பிட்டு வர விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

தாய்ப்பால் சுத்தமாக

·        தேன் 15-பங்கும், அமுக்கராங்கிழங்கின் ரசம் 10-பங்கும், மிளகுரசம் 15-பங்கும்,மணத்தக்காளி ரசம் 25-பங்கும் கலந்து சாப்பிட்டு வர தாய்ப்பால் தூய்மையடையும்.

நன்றாக ஜீரணமாக

·        வெள்ளரிப்பிஞ்சு, சிறிது எலுமிச்சம்பழம், சிறிது உப்பு சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடவும்.

·        எலுமிச்சம்பழ ரசத்தில் சிறிது இஞ்சியும், சீரகமும் சேர்த்து தினமும் 2-வேளை சாப்பிடவும்.

·        தினமும் 4-பேரிட்சம்பழம் சாப்பிடவும்.

·        எலுமிச்சம்பழத் தோலை சாப்பிடவும் அல்லது ஊறுகாய் சாப்பிடவும்.

·        ஓம வள்ளி இலையை இடித்துச் சாறெடுத்துச் சாப்பிடவும்.

Tamil Sites Directory - Listing of Tamil web sites